தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 65 படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்கிற பஞ்சாயத்து சில மாதங்களாக போய்க் கொண்டிருக்கிறது. வெற்றிமாறன், அட்லீ, மீண்டும் லோகேஷ் என தொடர்ந்தது இந்த கதை. கடைசியில் சூரரைப் போற்று படத்தின் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார் எனவும், அந்த படத்தைப் பார்த்த பின்னர் சுதா இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தான், தற்போது விஜய்யின் 65 வது படத்தில் ரஷ்மிகா நடிக்கவிருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, ரஷ்மிகாவுக்கு மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், கால்ஷீட் இல்லாததால் படத்தை ஒப்புக் கொள்ளமுடியவில்லை எனவும் கூறப்பட்டது.
ரஷ்மிகா முன்னதாக பல பேட்டிகளில் விஜய்யுடன் நடிப்பது எனது கனவு என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் எனது சின்ன வயது க்ரஸ் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த படத்தில் விஜய்யுடன் ரஷ்மிகா மந்தனா இணைந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
#HappyNewYear2025
ssss
WeLComeToSOORIYAN
Social Plugin
Social Plugin