தனது 10வது வயதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் கால் பதித்தவர் தளபதி விஜய். அதனைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு வெளியான ’நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானர். திரை வாரிசு என்றாலும் தனது ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர்.. எதையும் பொருட்படுத்தாமல் இன்று 64 படங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் என்று சொன்னால் மிகையாகாது.
தனது திறமையின் மூலம் சினிமா துறையில் நிலைத்து நிற்கும் தளபதி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயந்திருக்கும் விஜய், தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கி விட்டனர். இந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக அவருடைய பிறந்தநாளை இணைய வழியில் கொண்டாடி, சமூக வலைதளங்களை தெறிக்கவிட வேண்டும் என ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அதன் ஒரு பகுதியாக 20 பிரபலங்களை வைத்து காமன் டிபி ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்நிலையில் தற்போது "என் உயிர் தளபதி" என்ற பாடலை உருவாக்கியிருக்கின்றனர். மேலும் இந்த பாடலை இயக்குநர் பார்த்திபன், நடிகர் பிரேம்ஜி, அருண் ராஜா காமராஜ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, விஜய் மில்டன், இந்துஜா, அதுல்யா, சாண்டி, நந்திதா, காயத்ரி, சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா மேனன், நம்யா பாண்டியன், தீனா, அஞ்சனா, ரக்ஷன் உள்ளிட்ட 46 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படும். மிக பிரம்மாண்ட முறையில் பேனர்கள், போஸ்டர்கள் என்றும் ரசிகர்களால் கொண்டாட்டம் களைகட்டும். இந்நிலையில், இந்தாண்டு கொரோன பரவல் காரணமாக இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments