
இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும் என ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிக மெல்லியதாக இருக்கும் என்பதால் முகக்கவசம் மூலம் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளின் இதயம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.