Type Here to Get Search Results !

ssss

மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை பா.உறுப்பினர் : சிறீதரன்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் புதுவருட பிறப்பு கைவிசேஷம் வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,  1978 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குமார் பொன்னம்பலம் காலம் அது, தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பல ஜனாதிபதித்தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம் ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை.

ஆதரவு அளித்த பல பேர் தோல்வியடைந்தனர். ஆனால் வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்பையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது. தமிழர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாள சொல்ல முடியும் என தெரிவித்தார்.

கச்சத்தீவு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு  இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது. வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புல் கொடி உறவுகள் பாதிக்க விடமாட்டார்கள் தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது என தெரிவித்தார். 



Source: Kilinochchi/ Ananthan

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big