தீபாவளிக்கு மறுநாள் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13ஆம் திகதி) சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமான் அவர்கள் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராய்ச்சி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நீர் வழங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களிடமும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய மாகாண ஆளுநர் அவர்கள் விடுமுறை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன் காரணமாக திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டுமென அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் ரூபன் பெருமாளிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கையின் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க ஜீவன் தொண்டமான் அவர்கள் நடவடிக்கையெடுத்துள்ளார். தமது வேண்டுகோளை நிறைவேற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களுக்கும், கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ரூபன் பெருமாள் அவர்கள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை.
Social Plugin
Social Plugin