உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ள நாடாக விளங்கும் இந்தியாவில் வர்த்தகத்தைப் பிடிக்கப் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் போட்டிப்போட்டு வரும் நிலையில் வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) இரு முக்கிய நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதைக் கட்டாயம் நுகர்வோராகிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியச் சந்தை
இந்தியா மிகவும் போட்டி மிகுந்த சந்தை என்பதால் ஒரே பொருளைப் பல நிறுவனங்கள் விற்பனை செய்யும் நிலையும் உள்ளது, இதனால் மக்கள் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர். ஆனால் இதில் பல பொய்யான மற்றும் தவறான விளம்பரங்களும் உள்ளது.
சென்சோடைன் டூத்பேஸ்ட்
இந்தியாவில் தவறான அல்லது பொய்யான விளம்பரங்களைத் தடுக்கும் பொருட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) சென்சோடைன் டூத்பேஸ்ட்-ஐ தயாரிக்கும் கிளாக்சோ ஸ்மித்க்லைன் (ஜிஎஸ்கே) கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் லிமிடெட், மற்றும் நாப்டோல் ஆன்லைன் ஷாப்பிங் லிமிடெட் ஆகியவை விதிமுறைகளை மீறிய காரணத்தால் சென்சோடைன் மற்றும் நாப்டோல் விளம்பரங்களைத் தடை செய்து ஒளிபரப்புவதை நிறுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது.
நாப்டோல்
இதேபோல் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் தவறான வர்த்தக நடைமுறைகளைப் பயன்படுத்தி வந்த நாப்டோல் நிறுவனத்திற்கு CCPA அமைப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
விதிமீறல்
மேலும் சென்சோடைன் டூத்பேஸ்ட்-ஐ தயாரிக்கும் கிளாக்சோ ஸ்மித்க்லைன் (ஜிஎஸ்கே) கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம் வெளிநாடுகளில் இருக்கும் பல் மருத்துவர்கள் அங்கீகரிப்பதைக் காட்டி, இந்தியாவில் விளம்பரம் செய்து விற்பனை விதி மீறிய காரணத்தால் அடுத்த 7 நாட்களில் அனைத்து சென்சோடைன் டூத்பேஸ்ட் விளம்பரங்களை மொத்தமாக ஒளிபரப்புவதில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Social Plugin
Social Plugin