கிம் உன் தாத்தா மரணம்.. வடகொரிய மக்களுக்கு ஒரு வார காலம் சிரிக்க தடை போட்ட அதிபர்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் ஜோங் ஜு காலமானார்.. அவருக்கு வயது 101 ஆகிறது.. இந்த துக்கத்தை நாடே அனுசரித்து வரும் நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை அதிபர் விதித்துள்ளார்.
டகொரியாவை நிறுவியவர் கிம் இல் சங்.. இவரது சகோதரரும் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜு வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு நிறுவிய கிம் இல் சங், தன்னுடைய வாழ்க்கையையே அந்த நாட்டுக்காக ஒப்படைத்தார்.. கம்யூனிச நாடாக இருந்தபோதிலும், சர்வாதிகாரியாகவே இவர் செயல்பட்டார்…
நிர்வாகம்
1994-ல் இவர் இறந்துவிட்டார்.. அதனால் அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவரும் கடந்த 2011-ல் இறந்துவிட்டார்.. அதனால் அவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி உள்ளார்.. இப்போது 3-வது தலைமுறையாக இவர்கள் ஆட்சியில் உள்ளனர்... உயிரிழந்த கிம் ஜோங் ஜு, அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு தாத்தா முறையாகும்.. ஆரம்ப கட்டத்தில் கிம் யங் ஜு தன்னுடைய சகோதரரின் ஆட்சிகாலத்தில் வடகொரியாவில் பலம் வாய்ந்த தலைவராக விளங்கியவர்.. இவர்தான் அப்போது நிர்வாகங்களை கவனித்து வந்தார்..
உடல்நலக்குறைவு
ஆனால், கடந்த 2015-ல் பொதுவெளியில் இவர் தோன்றியதோடு சரி, அதற்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக வெளியே வராமல் இருந்தார்.. தற்போது இவர் இறந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது... ஆனால், இவர் எப்போது இறந்தார் என்பதை அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை. தாத்தா கிம் யோங் ஜூ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.. "கிம் யோங் ஜு (தொழிலாளர்களின்) கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அர்ப்பணிப்புடன் போராடினார் என்றும் வடகொரியாவின் ஆளும் கட்சி மற்றும் அரசின் முக்கிய பதவிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றினார் என்றும் அரசு சார்பில் புகழாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அனுதாபம்
இந்நிலையில், இவரது மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், வட கொரியர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக மது அருந்தவோ அல்லது சிரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல டிசம்பர் 17 அதாவது இன்றைய தினம் அவர்கள் மளிகை கடைக்கு செல்வதற்கு கூட அனுமதி இல்லையாம்.. இது அந்நாட்டின் வழக்கம் என்கிறார்கள்.
குற்றவாளிகள்
கடந்த காலங்களில் அரச குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பொதுமக்கள் மது அருந்தினால் அல்லது போதையில் இருந்தால், அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு, கைது செய்யப்படுவார்களாம்.. அது இப்போதும் தொடர்கிறது.. துக்கக் காலத்தில் குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால், சத்தமாக அழக்கூடாதாம்.. அதேபோல, துக்க காலத்தில், மக்கள் தங்கள் சொந்த பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது... சரியான முறையில் ஒவ்வொருவரும் வருத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் சட்டதிட்டமாகும்.. மக்கள் துக்க நிகழ்வில் சரியாக வருத்தப்படுகிறார்களா? துக்கத்தை அனுசரிக்கிறார்களா என்பதை கண்காணிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
வறுமை
இதனால் போலீசாருக்கும் ஒரு மாத காலத்திற்கு நிம்மதி இல்லை என்கிறார்கள்.. வடகொரியாவில் வறுமையும், பட்டினியும் தாண்டவமாடி கொண்டிருக்கிறது.. ஏற்கனவே அந்நாட்டு மக்கள் அதிபரின் கெடுபிடியால் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது, மேலும் மேலும் மக்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருவது அண்டை நாட்டு மக்களை கவலையடைய செய்து வருகிறது.
Social Plugin
Social Plugin