நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு செய்யாத குற்றத்திற்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ராசா கண்ணு என்பவரின் கதையை உலகத்திற்கு எடுத்துக் காட்டியது ஜெய் பீம் படம் இந்த படங்களில் சில காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. தனிநபர்களை குறிவைக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
நீதி நாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே படத்தின் மையக்கரு பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி பேச முயற்சித்து இருக்கிறோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ சமூகத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை சிலர் சுட்டிக்காட்டிய பிழையும் உடனடியாக திருத்தி சரி சய்யப்பட்டது தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு சமுதாயத்தையும் இழிவு படுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன் அதேபோல படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல இத்திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது இதில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருந்தோம்.
எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள் அதில் ஜாதி மத மொழி இன பேதமில்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட “பெயர் அரசியலுக்குள் வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கிறது விளம்பரத்திற்காகயாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் சமத்துவமும் சகோதரத்துவமும் பெறுக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி. என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Social Plugin
Social Plugin