Type Here to Get Search Results !

#LiveTamilTV

விவசாயிகளின் தொடர் போராட்டம்: பணிந்தது மத்திய அரசு!

பாரத தேசத்தில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

பாரத் பந்த்

பாரத் பந்த்

ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 27-ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தினார்கள்.

கரிஃப் பயிர்கள் கொள்முதல் தாமதம்

கரிஃப் பயிர்கள் கொள்முதல் தாமதம்

இதற்கிடையே கரிஃப் பயிர்கள் கொள்முதல் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானாவில் அக்டோபர் 11-ம் தேதிக்கு காரிஃப் பயிர்கள் கொள்முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

போலீசார் முற்றுகையிட்ட விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட காரிஃப் பயிர்கள் கொள்முதல் நாளை அதாவது அக்டோபர் 3-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தாமதத்தால் மத்திய அரசு நெல் மற்றும் தினை கொள்முதல் செய்வதை இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி என்பதை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மத்திய அரசு பணிந்தது

மத்திய அரசு பணிந்தது

'கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததால் அக்டோபர் 3-ம் தேதி முதல் கொள்முதல் தொடங்கும், "என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார். மத்திய அரசு தனது முடிவை மாற்றியதால், விவசாயிகள் நடத்தவிருந்த மீதமுள்ள போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big