சிங்களவர் மனதை வெல்ல இந்திய உளவு அமைப்பு(RAW) வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது.
பாடகி யொஹானியின் "மெனிகே மகே ஹிதே" பாடல் இலங்கையில் கூட பிரபலமாகவில்லை.
இந்தப் பாடலை இந்தியாவில் பிரபலமாக்கியது இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான "றோ" அமைப்பாகும்.
என மியன்மாருக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் நளின் த சில்வா சமூக வலைத்தள ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
இந்த அரங்கேற்றத்தின் நோக்கம் சிங்கள மக்களின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பதாகும்.இலங்கை இந்தியாவை விட்டு தூர விலகிச் சென்று கொண்டிருப்பதை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.
இதில் அரசியலும் இராஜதந்திரமும் உண்டு. இதற்காக வேண்டியே றோ அமைப்பு பிரபலமில்லாத யொஹானியின் பாடலுக்கு இந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது இந்தியாவின் இந்த அணுகுமுறையை இலங்கை அரசு இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Source: Pathivu
Social Plugin
Social Plugin