தடுப்பூசி அட்டை பரிசீலனை...மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை பரிசீலிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கைகளை, பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 41 நாட்களாக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பணியாளர்கள், பொதுப் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் பயணிகள், பணியாளர்கள் மற்றும் வாடகை போக்குவரத்தை மேற்கொள்ளும் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுகாதாரத் துறையினரால் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Social Plugin
Social Plugin