இலங்கையில் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று(13) ஆரம்பமாகியது.
இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும்பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய(12) தினம் ஆலய நிர்வாகத்தினரே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்திகு பிரவேசிப்பதை தடை செய்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தனர்.
அத்தோடு ஆலய கொடியேற்றத்தைக் காணவிரும்பும் பக்தர்கள் ஆலயத்திற்குரிய வலைஒளி ஊடாக காண முடியும் எனம் அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பொதுமக்கள் தமது பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் கருதாது இவ்வாறு ஆலயத்திற்கு படையெடுப்பது மிகவும் ஆபத்தானதும் வருந்தத்தக்கதுமான செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Social Plugin
Social Plugin