Type Here to Get Search Results !

#LiveTamilTV

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசும் திண்டுக்கல் லியோனி.. பாடநூல் கழக தலைவரா?அன்புமணி எதிர்ப்பு!

பெண்களை இழிவுபடுத்தி பேசும் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழக பாடநூல் கழகத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss opposes to Dindigul I. Leoni for head of TN Textbook Corporation

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:Anbumani Ramadoss opposes to Dindigul I. Leoni for head of TN Textbook Corporation

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big