அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஃப்கானிஸ்தானில் இருந்து இராணுவத் துருப்புகளை மீட்டுக்கொள்ளும் தமது முடிவைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.
அமெரிக்க துருப்புகளின் பணி, அங்கு அடுத்த மாத இறுதியில் முடிவடையும் என்றார் அவர்.
(கோப்புப் படம்: Reuters) |
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு தொடர்ந்து பல பகுதிகளைக் கைப்பற்றிவரும் நிலையில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவப் படையினர் ஆஃப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை எதிர்த்து போராடி வருகின்றனர்.
Social Plugin
Social Plugin