ஈழ அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈழ அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் - குடியுரிமை வழங்க இயலாது - மீண்டும் தமிழின விரோதியான இந்தியா!
Friday, July 30, 2021
திருச்சி கொட்டப்பட்டு ஈழத்தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி கொட்டப்பட்டு முகாம் ஈழத்தமிழர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளதால், இது குறித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடலாம் என தெரிவித்தார்.
தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Social Plugin
Social Plugin