Type Here to Get Search Results !

#LiveTamilTV

கனடாவின் 30வது புதிய ஆளுநர் நாயகமாக, மேரி சைமன் இன்று(27) பதவியேற்றுள்ளார்!

கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக, மேரி சைமன் இன்று பதவியேற்றுள்ளார். கனடாவின் முப்பதாவது ஆளுநர் நாயகமான மேரி சைமன், அப்பதவியை வகிக்கின்ற முதல் பூர்வகுடியின நபர் ஆவார். 

(Pict:News1130)


முன்னாள் கனடிய ராஜதந்திரியான அவர், புதிய ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதை, எலிசபெத் மகாராணியும் அங்கீகரித்திருந்தார். மேரி சைமன் போன்ற ஒருவர் கனடாவுக்கு அவசியமென, பதவியேற்பு நிகழ்வின்போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 


பெரும்பரவலில் இருந்து மீண்டு நாட்டை கட்டியெழுப்புவது, காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பது போன்றவற்றில், அவரின் பங்களிப்பு தேவைப்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். 

[ Canada's Prime Minister Justin Trudeau poses for a photo with Mary Simon, the next Governor General of Canada, her husband Whit Fraser and Sophie Gregoire Trudeau, in Gatineau, Quebec, Canada July 6, 2021. (REUTERS/Patrick Doyle REUTERS)]

கனடிய வரலாற்றில் முதன்முறையாக, ஆளுநர் நாயகத்தின் பதவியேற்பு, ஆங்கிலத்திலும், மேரி சைமனின் பூர்வகுடியின தாய்மொழியிலும் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, கனடாவின் அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உள்ள நிலையில், புதிய ஆளுநர் நாயகம் மேரி சைமனின் பிரெஞ்சு மொழியை பேச முடியாத நிலை, சில கரிசனைகளை உண்டாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- East FMஆல் பதிவிடப்பட்டது -

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big