கொரோனா தொற்றுநோய் நெருக்கடி இன்னும் தீராத நிலையில், இப்போது உலகப் போர் மூழும் அச்சுறுத்தல் உள்ளதாக வரும் செய்திகள் திகிலை கிளப்புகின்றன.
கொரோனா நெருக்கடியின் மத்தியில் உலகப் போர் வெடித்தால், அதன் விளைவுகள் பற்றி சிந்தித்தாலே குலை நடுங்குகிறது.ரஷ்யா-உக்ரைன் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகப் போர் மூழும் சாத்தியக்கூறுகள் தீவிரமடைந்துள்ளன. நிலைமை மேம்படவில்லை என்றால், ஒரு மாதத்திற்குள் உலகம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான போரை எதிர்கொள்ளும் என்று இராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யா சமீபத்தில் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில், 4,000 துருப்புக்களை சர்ச்சைக்குரிய எல்லைக்கு அனுப்பியுள்ளது. ரஷ்ய (Russia) இராணுவத்தின் இந்த நடவடிக்கை காரணமாக, ஐரோப்பா மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
அடுத்த சில வாரங்களில் போர் வெடிக்கக்கூடும் என, ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பாவெல் ஃபெல்கென்ஹார் கூறியுள்ளார் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கூறிய அவர், ஊடகங்களில் இதைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும், மிகவும் மோசமான அறிகுறிகள் தென்படுகின்றன.
எல்லையில் ரஷ்ய பீரங்கி டாங்குகளின் இயக்கம் தீவிரமடைந்தது.
ரஷ்ய இராணுவ நிபுணர் பாவெல் ஃபெல்கென்ஹார், மேலும் கூறுகையில், போர் வெடித்தால், அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக இல்லாமல், ஐரோப்பிய அல்லது உலக அளவிலான போராக வடிவெடுக்கும் என்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 4,000 ரஷ்ய வீரர்களை டாங்குகள் மற்றும் பிற கவச வாகனங்களுடன் சர்ச்சைக்குரிய எல்லை பகுதிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டதை அடுத்து ஃபெல்கென்ஹரின் இந்தஅறிக்கை வெளிவந்துள்ளது. அப்போதிருந்து, ஐரோப்பாவும் தனது இராணுவத்தை மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறது.
கடந்த வாரம், உக்ரைனின் தளபதி ருஸ்லான் கோமாச், பாராளுமன்றத்தில் ரஷ்ய கூட்டமைப்பு நம் நாட்டிற்கு எதிரான கொள்கையைத் தொடர்கிறது என்று கூறினார். எல்லைப் பகுதியில் குறைந்தது 25 கூடுதல் படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இவை அனைத்தும் உக்ரைன் எல்லையில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ள குழுக்கள் என அவர் மேலும் கூறினார்
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டால், அது உலகப் போராக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ரஷ்யாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் கடுமையாக எதிர்க்கின்றன, உக்ரைன் அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ளது. ரஷ்யா உக்ரேனுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும், மற்ற நாடுகளும் அவர்களுடன் சேரும். சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து இராணுவ ஆயுதங்கள் ஏற்றப்பட்ட ஒரு சரக்குக் கப்பல் உக்ரைனை சென்றடைந்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
Social Plugin
Social Plugin