தமிழர் களுக்கு நீதி கோரி இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெத்துள்ளனர்.
பொத்துவில் - பொலிகண்டி பேரணிக்கு ஆதரவாக பிரித்தானியாவில் வாகனப் பேரணி!
Sunday, February 07, 2021
அந்த வகையில், தமிழர் ஒருங்கிணைக்கு குழுவின் பிரித்தானிய கிளையானது பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியை நெறிப்படுத்தி வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார்மீக வேண்டுகைக்கமைவாக இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழர் ஒருங்கிணைக்கு குழுவின் பிரித்தானிய கிளையானது இந்த பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியை சுகாதார விதிமுறைகழுக்கமைவாக நெறிப்படுத்தி வருகின்றது.
இதன்படி, BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd, E12 5DH ஆகிய இடங்களில் இருந்து பேரணி ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Plugin
Social Plugin