இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபகாலமாக குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், இப்போது கனடாவில் கார்பன் வரிகளை கடுமையாக உயர்த்தியதன் மூலம் கனேடிய விவசாயிகளின் கோவத்துக்கு ஆளாகியுள்ளார். 2050-ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான கனடா அரசாங்கத்தின் புதிய காலநிலை நடவடிக்கை திட்டத்தின் படி, 2023-ஆம் ஆண்டு தொடங்கி கார்பன் விலையை ஆண்டுக்கு 15 டொலராக உயர்த்துவதாகவும், 2030-ஆம் ஆண்டில் 1 டன்னுக்கு 170 டொலராக உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.2016-இல் வகுக்கப்பட்ட அசல் திட்டத்தில், லிபரல் கட்சி அரசாங்கம் ஒரு டன்னுக்கு 20 டொலர் என்ற கார்பன் வரியை விதித்தது, இது 2022-ஆம் ஆண்டில் 50 டாலராக உயர்ந்துள்ளது. பிரதமர் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் ஐந்து ஆண்டுகளின் முடிவு நெருங்கி வருவதால், அது 2030-க்கு மாசுபாட்டின் விலையில் நீண்டகால உறுதிப்பாட்டை வழங்குவதற்கான நேரம் இது” என குறிப்பிடப்பட்டுள்ளது.இது கனடாவின் விவசாயத் தொழிலில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறைப் பத்திரிக்கையான The Western Producer, "இது கனடாவின் இயல்புநிலை கார்பன் வரி விகிதத்தில், 10 ஆண்டுகளுக்குள் 465% அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில் "இந்த அதிகரிப்பு மேற்கு கனேடிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மில்லியன் டாலர்களை கூடுதல் வரிகளில் செலவழிக்கக்கூடும் மற்றும் பண்ணை கட்டிடங்களை சூடாக்குவது, தானியங்களை உலர்த்துவது, ரயில் மூலம் பொருட்களை நகர்த்துவது மற்றும் உரம் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பண்ணை உள்ளீடுகளை வாங்குவதற்கான செலவுகளை அதிகரிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், "வடக்கு டகோட்டாவில் எங்களுக்கு தெற்கே 60 மைல் தொலைவில் உள்ள எனது அண்டை நாட்டுக்காரர்கள் இது போன்ற வரியைக் காட்டாமல் இருக்கும்போது, கனடாவில் ஒரு டன் கார்பன் வரிக்கு 170 டொலரை கட்டிடவேண்டுமா? நாங்கள் என்ன செய்வது?
நாங்கள் எப்படி போட்டியிட முடியும்? நான் எவ்வாறு வியாபாரத்தில் இருக்க முடியும்?" என்று மானிட்டோபா மாகாணத்தில் உள்ள கீஸ்டோன் வேளாண் உற்பத்தியாளர்களின் தலைவரான பில் காம்ப்பெல் கேட்டுள்ளார். மேற்கு கனேடிய கோதுமை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் குண்டர் ஜோச்சம், "எங்கள் மத்திய அரசு சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகள் மீது முடக்கு வரி விதிக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை" என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ளார்.
இது அனைத்து கனேடியர்களுக்கும் மளிகை பொருட்களின் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று விவசாயிகளின் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
Social Plugin
Social Plugin