கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளின் கொரோனா முடக்கமும் & விடுவிப்பும்! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

Dec 13, 2020

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளின் கொரோனா முடக்கமும் & விடுவிப்பும்!

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் குறித்த விபரங்களை கொவிட்19 தடுப்பு செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை மயூரா பிரதேசம் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கிராண்ட்பாஸ் - சிறிசந்த செவன, சிறிமுது உயன, மாளிகாவத்தை - லக்ஹிரு செவன, பொரளை, சிறிசர உயன ஆகிய குடியிருப்பு திட்டங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

                              
எவ்வாறாயினும், கொழும்பின் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம்வீதி, வாழைத்தோட்டம், தெமடகொடை, மாளிகாவத்தை, மருதானை ஆகிய காவற்துறை அதிகாரப் பிரிவுகளும், கொம்பனித்தெருவின் வேகந்த கிராமசேவகர் பிரிவும், பொரளையில் உள்ள வனாத்தமுல்லை கிராமசேவகர் பிரிவும், வெல்லம்பிட்டியில் உள்ள சாலமுல்ல கிராமசேவகர் பிரிவும் லக்சந்த செவன வீட்டுத்திட்டம் மற்றும் வெள்ளவத்தை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கோகில வீதி என்பனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய வத்தளை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டி, ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

பேலியகொட காவல்துறை அதிகாரத்துக்குட்பட்ட பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பேலியகொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பேலியாகொடவத்த, பேலியாகொட கங்கபட, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவில் வெலேகொட வடக்கு பகுதியில் தனிமைப்படுத்தல் தொடரும்.

நீர்கொழும்பு காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட எம்.சி.குடியிருப்பு தொகுதி மற்றும் வெயாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் தொடரும்.

இதேவேளை வத்தளை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள நைய்துவ பகுதியும் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட துவே வத்த பகுதியும் இன்று அதிகாகலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன் பேலியகொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹனவீர மாவத்தை பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட {ஹுணுபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குபட்ட வெலிகந்த பகுதியும் நிட்டம்புவ காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இன்ரா மாவத்தை பகுதிகளும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேகங்கல்ல கிழக்கு மற்றும் வேகங்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிய ஹீனிடியங்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை அல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை தொடர்ந்தும் மூடப்படுவதாக தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொரோனா பரவல் காரணமாக கண்டி நகர எல்லையில் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில், கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், திருத்துவ கல்லூரி, தக்ஷிலா கல்லூரி முதலான பாடசாலைகள் தவிரந்த ஏனைய 42 பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Post Top Ad

Your Ad Spot