நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச, தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்று அபாய நிலைமை காரணமாக நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 1.2 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin