கொரோனாவால் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா மரணமடைந்துவிட்டார். இதை அவரது சகோதரி உமா துபேலியா உறுதிப்படுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. இவருக்கு உமா துபேலியா, கீர்த்தி மேனன், சதீஷ் துபேலியா ஆகிய மகனும் இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் சதீஷ் துபேலியா ஜோகன்ஸ்பெர்க்கில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் 66 ஆவது பிறந்தநாள் கொண்டாடினர். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பாதித்தது.
இதையடுத்து நிமோனியாவுக்கு ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இதை அவரது சகோதரி உமா துபேலியா சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்தார்.
அவர் கூறுகையில் என்னுடைய அன்புக்குரிய சகோதரர் ஒரு மாதமாக நிமோனியாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் பாதிக்கப்பட்டது. இ்நத நிலையில் அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
சதீஷ் துபேலியா தனது வாழ்வை ஊடகத்துறையில் கழித்தார். அவர் வீடியோகிராபராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றினார். டர்பனில் மகாத்மா காந்தி அறக்கட்டளையை தொடங்கி சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். யாருக்கு எந்த உதவியானாலும் அதை செய்வதில் தயக்கம் காட்டாதவர் என பலரால் அறியப்படுகிறார்.
Social Plugin
Social Plugin