ரசிகர்களால் ‘தளபதி’ எனக் கொண்டாடப்படும் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள், ரசிகர் மன்றம் அமைத்துள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் அவருக்கு 12 லட்சம் ரசிகர்மன்றங்கள் இருந்தன.
அவற்றை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அண்மையில் அரசியல் கட்சியாக பதிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், தனது அமைப்புக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், இளைஞரணி, தொண்டரணி, மீனவர்கள் அணி, வழக்கறிஞர்கள் அணி உள்ளிட்டவற்றுக்கு, தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை புதிதாக நியமனம் செய்து தளபதி விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தந்த அணிகளின் தலைவர்களுக்கு, நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேநேரம், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அப்பா - பிள்ளை இடையிலான இந்த அரசியல் ஆட்டம் இப்போதைக்கு முடியாது எனத் தோன்றுகிறது.
Social Plugin
Social Plugin