அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்திய நேரப்படி காலை 11.15 மணிக்கு டெலவேரில் தொண்டர்கள் இடையே உரையாற்றிய ஜோ பைடன், "இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்டத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும்வரை தேர்தல் முடியவில்லை," என்று தெரிவித்தார்.
Twitter பதிவின் முடிவு, 1
நம்பிக்கையை கைவிடாதீர்கள். இதை நாம் வென்று முடிக்கப்போகிறோம் என்று பைடன் மேலும் தெரிவித்தார்.
Twitter பதிவின் முடிவு, 2
இதே சமயம், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "எண்ணிக்கையில் நாங்கள்தான் அதிகம். ஆனால், அவர்கள் இந்த தேர்தலை அபகரிக்க முயல்கிறார்கள். அதை செய்ய நாங்கள் ஒருபோதும் விட மாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு செய்ய முடியாது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு இன்றிரவு நான் உரையாற்றுவேன்." என்று கூறியுள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 3
இருந்தாலும் போர்க்கள மாகாணங்களாக கருதப்படும் அரிசோனா (11), விஸ்கான்சின் (10), மிஷிகன் (16), பென்சில்வேனியா (20), ஓஹையோ (18), வடக்கு கரோலைனா (15), ஜோர்ஜா (16), ஃபுளோரிடா (29) ஆகியவற்றில் ஃபுளோரிடா நீங்கலாக மற்றவற்றில் நத்தை வேகத்தில் இருவருக்கும் இடையிலான போட்டியின் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன.
ஃபுளோரிடா மாகாணத்தில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட வேளையில், அங்கு ஜோ பைடனை விட டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
மற்ற முக்கிய மாகாணங்களான ஜோர்ஜா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிஷிகன், ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகியவற்றில் முடிவுகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறலாம் என்ற வகையில் கள நிலவரம் உள்ளது.
அமெரிக்க தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியபோதே 10 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர். கடந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் இது அதிகமான வாக்குப்பதிவாக கருதப்படுகிறது.
இருந்தபோதும், வந்து கொண்டிருக்கும் முன்னிலை நிலவரப்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை இப்போதே கணிக்க இயலாத நிலை உள்ளது. எனினும், செனட் சபையில் பெரும்பான்மையுடன் இருக்கும் குடியரசு கட்சிக்கு அங்கு நிலைமை மாறலாம் என்ற நிலை உள்ளது.
கொலராடோவில் ஒரு இடத்தை குடியரசு கட்சி இழந்துள்ளது. ஆனால், அலபாமாவில் அந்த கட்சி ஒரு இடத்தை பெற்றிருக்கிறது.
செனட் சபை குடியரசு கட்சித் தலைவர் மிட்ச் மெக் கொனெல், டிரம்பின் நெருங்கிய நண்பர் லிண்ட்ஸே கிரஹாம் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
மறுபுறம் மக்கள் பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சிக்கு தன்வசம் தக்க வைக்கும் வகையிலேயே முன்னணி நிலவரம் உள்ளது.
மிட்வெஸ்ட் மாகாணங்கள் எனப்படும் இல்லினோயிஸ், இண்டியானா, ஐயோவா, கன்சாஸ், மிஷிகன், மின்னிசொட்டா, மிஸ்ஸூரி, நெப்ராஸ்கா, வடக்கு டக்கோட்டா, ஓஹையோ, தெற்கு டக்கோட்டா, விஸ்கான்சின் ஆகியவற்றில் முடிவுகள் எந்த பக்கத்து வேண்டுமானாலும் சாயலாம் என்றவாறு கடும் போட்டி நிலவுகிறது.
பகுதியளவு வெளிவந்த முடிவுகளின்படி அரிசோனாவில் ஜோ பைடனுக்கு சாதகமாக வாக்குகள் குவிந்து வருகின்றன. ஒரு காலத்தில் இங்கு கோலோச்சி வந்த குடியரசு கட்சிக்கு இந்த பறிபோவது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் டிரம்ப் முன்னணி வகிப்பதாக சிபிஎஸ் செய்தித்தொலைக்காட்சி கணிக்கிறது.
ஈஸ்ட்கோஸ்ட், ஜோர்ஜா, வடக்கு கரோலைனா ஆகியவற்றில் தொங்கு நிலை நீடிக்கிறது. ஃபுளோரிடா, பென்சில்வேனியா ஆகியவற்றில் டிரம்புக்கு சாதகமாகும் நிலை உள்ளது. மற்ற மாகாணங்களிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை.
பிபிசி கணிப்பின்படி அலபாமா, வியோமிங், தெற்கு கரோலைனா, கன்சாஸ், நெப்ராஸ்கா, உடா, லூயிசியானா, இண்டியானா, வடக்கு டக்கோட்டா, தெற்கு டக்கோட்டா, கென்டக்கி, டென்னிஸ்ஸி, ஓக்லஹோமா, அர்கன்சாஸ், மேற்கு விர்ஜீனியா ஆகியவற்றில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் மாற்று அணியை தேர்வு செய்யும் மாகாணம் என்ற வகையில், மிஸ்ஸூரியில் இம்முரை டிரம்புக்கு சாதகமான முடிவுகள் வருகின்றன.
பிபிசி கணிப்பின்படி பைடன் தனது சொந்த மாகாணமான டெல்லவேரில் முன்னிலை வகிக்கிறார். நியூயார்க், இல்லினோயிஸ், நியூ ஹேம்ப்ஷையர், கொனெக்டிகட், நியூ மெக்சிகோ, கொலரானோ, வெர்மொன்ட், மேரிலேண்ட், மஸ்ஸட்சூசிட்ஸ், நியூ ஜெர்சி, வாஷிங்டன் டி.ஜி ஆகியவற்றில் ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது.
மொன்டானாவில் டிரம்பும், மின்னிசொட்டா, நெவாடா, மெய்ன், ரோட் ஐலேண்ட் ஆகியவற்றில் டிரம்புக்கு ஆதரவான சூழல் காணப்படுவதாக சிபிஎஸ் கணித்துள்ளது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் மினிசொட்டாவை பறிகொடுத்தார். ஆனால் இம்முறை அவருக்கு சாதகமான நிலை இருக்கும் என குடியரசு கட்சியினர் நம்புகிறார்கள்.
அமெரிக்க நேரப்படி மேற்கு கடலோர மாகாணங்களில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
Source: BBC TAMIL
Social Plugin
Social Plugin