கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியிருக்கையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது.
முகக்கவசம்
மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம். அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும். தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும் என்றார்.
Social Plugin
Social Plugin