தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு அறிவிப்புவெளியிட்டுள்ளது .
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களுக்கு இடையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொது மக்கள் இடையே விமர்சனத்திற்கு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் அறிவிப்பு
இந்த இருவேறு கருத்துக்களையும் கல்வித்துறை ஆராய்ந்து, 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
Social Plugin
Social Plugin