Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

கனடாவில் சாமியார் ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது!

ரொறொண்டோவில் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி உள்ளூர் கோவிலில் உள்ள சாமியார் ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

இச் சம்பவம் ஏடொபிகோக் 2107 காட்லின் என்ற இடத்தில் (2107 Codlin Cr. in Etobicoke) அமைத்துள்ள பாரத் சேவாஸ்ரம் சங்க கனடா ஆலயத்தில் ஜூன் 1994 க்கும் டிசம்பர் 31, 1997 இடையில் இடம்பெற்றதாக கனடிய காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த குற்றம் சாட்டப்பட்ட, துஸ்பிரயோகம் நடைபெற்ற பொழுது சிறுமிக்கு எட்டில் இருந்து 11 வயது இருக்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர், மறுபுறம், 42 முதல் 47 வயதுடையவர் என்றும் காவல் துறை கூறுகின்றது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய டொராண்டோவைச் சேர்ந்த புனித சுவாமி புஷ்காரநண்டா (Pushkarananda) செவ்வாய்க்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

68 வயதான அவர், இளைஞன் ஒருவர் மீது துஸ்பிரயோகம் மற்றும் வன்கொடுமை உடல் ரீதியான தொடுகை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் வேறு சிலரும் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர், அதனால் மேலும் விசாரணை தொடர்பான தகவல்களைக் தெரிந்தவர்களை முன்வருமாறு ரொறொண்டோ காவல்துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big