Type Here to Get Search Results !

#LiveTamilTV

வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவுண்டமணி புகார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி திடீரென உடல்நலக் குறைவாக இருப்பதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. கவுண்டமணி குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது உண்மை அல்ல என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி அந்த படத்திற்கான பணிகளை அவர் செய்து வருவதாகவும் கொண்ட கவுண்டமணி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் கவுண்டமணி குறித்த வதந்தி வெளியாவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஓரிரு முறையாவது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியாகி உள்ளதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக கவுண்டமணி தரப்பிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து தன்னுடைய வழக்கறிஞர் மூலம் கவுண்டமணி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஒருசில இணையதளங்கள் தன்னுடைய உடல் நிலை குறித்து அவதூறு பரப்புவதாகவும், தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது

இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து கவுண்டமணி குறித்த வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big