"விபூதியை நெற்றியில் பூசாமல், பெயரளவுக்கு கழுத்தில் தடவிக் கொண்டு, மீதமிருந்த விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார், தேவரை அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று" சில தேவர் அமைப்புகள் ஒன்று திரண்டு வருகின்றன.
நேற்று ஸ்டாலின் தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த சென்றதில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.. ஸ்டாலினுக்கு எதிராக "கோ பேக் ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.இப்போது அடுத்த பிரச்சனை கிளம்பி உள்ளது.. முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.. அப்போது அங்கு அவருக்கு விபூதி அளிக்கப்பட்டது... அதை நெற்றியில் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட அவர், மீதமிருந்த விபூதியை கீழே கொட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டும் வீடியோவையும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தென்னாட்டு மக்கள் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் "தேவர் திருமகனார் ஆலயத்திற்கு ஆன்மீக நோக்கத்துடன் வராமல், அரசியல் சுயநலத்திற்காகவும், தேவரின மக்கள் ஓட்டுக்களை பெறுவதற்காகவும் வந்த திமுக தலைவரை வன்மையாக கண்டிக்கிறோம்.. தேவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட முக ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவோம் என பகல் கனவு காண்கிறார்.
அவர் கனவு நிறைவேறாது.. பசும்பொன்னில் தவறாக நடந்து கொண்ட ஸ்டாலினை கண்டித்து தேவரின் அமைப்புகளை ஒன்று திரட்டி, ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தென்னாட்சி மக்கள் கட்சி நிறுவனதலைவர் கணேசதேவர் பெயரில் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதுபோலவே தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டு கழகமும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. "தேவரின் விபூதியை பூசாமல், கீழே கொட்டி மெத்தனம் காட்டிய எதிர்க்கட்சி தலைவரின் திமுகவிற்கு சமுதாயத்தின் ஓட்டு, ஒட்டுமொத்தமாக கிடைக்காது.. இந்த செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், தவறினால் எங்கள் இன மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin