பிரான்சின் நீஸ் (Nice) நகரில் உள்ள Notre Dame தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவருடன் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் 47 வயது நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் படுகொலைத் தாக்குதலில் 3 பேர் மாண்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் புலனாய்வை விரிவுபடுத்தினர்.
கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய 21 வயது ஆடவர், மாது ஒருவரின் தலையைத் துண்டித்துக் கொன்றதாகவும், மேலும் இருவரைக் குத்திக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துவிட்டனர்.
அவர் சில நாள்களுக்கு முன்புதான் துனிசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
அகதியாகப் படகில் இத்தாலி சென்ற அவரிடம், செஞ்சிலுவைச் சங்கம் அளித்த அடையாள ஆவணம் இருந்தது.
தாக்குதலின்போது காவல்துறை அவரைத் துப்பாக்கியால் சுட்டதால், அவர் கடுமையாகக் காயமுற்றார்.
தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், நீஸ் நகரவாசிகள் தாக்குதல் நேர்ந்த தேவாலயத்துக்கு வெளியே மெழுகுவர்த்திகளையும் மலர்களையும் வைத்து மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அந்தச் சம்பவத்தைச் சமய ரீதியான பயங்கரவாதத் தாக்குதல் என்று வருணித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிஉச்சப் பாதுகாப்பு
கடந்த 2 வாரங்களில், இத்தகைய தாக்குதல் நேர்வது இது இரண்டாவது முறை.
Social Plugin
Social Plugin