Type Here to Get Search Results !

#LiveTamilTV

கொரோனா வைரஸின் 2வது அலையை எதிர்கொள்வதால் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்துகின்றன.!

ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதிக்கு நாடெங்கும் அமுலுக்கு வரவுள்ள புதிய தடுப்பு நடவடிக்கைகளை அவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.

உணவகங்கள், கலாசார மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அங்கு மூடப்படுகின்றன.உணவு விநியோக சேவையை (take-away) வழங்க உணவகங்கள் அனுமதிக்கப்படும். கடைகள், பாடசாலைகள், ஆரம்ப பள்ளிகள் வழமை போன்று திறந்திருக்கும்.

ஆர்ப்பாட்டங்கள் தவிர பெரியளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன. பொது இடங்களில் ஒன்று கூடுவோர் எண்ணிக்கை பத்தாக வரையறுக்கப்படுகிறது. 

இக்காலப் பகுதியில் உதைபந்தாட்ட சம்பியன் போட்டிகள் உட்பட தொழில் முறையான சகல விளையாட்டு நிகழ்வுகளையும் கடுமையான சுகாதார நெறிமுறைகளுடன் மூடிய அரங்குகளுக்குள் நடத்துவது என்று நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்களது சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர்ந்த ஏனைய அமெச்சூர் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன.மிக வேகமான வைரஸ் பரவலுக்கு விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்பளிக்கின்றன என்பதாலேயே அவற்றைத் தடைசெய்ய அரசு தீர்மானித்துள்ளது.

கடுமையானதும் நாடு முழுமைக்கும் உரியதுமான இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை ஈடுசெய்வதற்காக மேலும் 10 பில்லியன் ஈரோக்கள் ஒதுக்கப்படுவதாக மெர்கல் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக வெளியாகிய சுகாதார அறிக்கைகளின்படி ஜெர்மனியில் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்து 964 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 85 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. நத்தார் பண்டிகைக்கால குடும்ப ஒன்று கூடல்கள் தொற்று நிலைவரத்தை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் அந்த நாடுகள் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துகின்றன.

பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே ஆட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இது தொடர்பாகப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், கொரோனா வைரஸின் முதல் அலையை விட மோசமான இரண்டாவது அலை நாட்டைத் தாக்கும் இடர்பாடு இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரான்ஸை ஒப்பிடும்போது மென்மையான தேசிய முடக்க நிலை ஒன்றை ஜெர்மனியும் செயல்படுத்தவுள்ளது. இந்த ஜெர்மனி முடக்க நிலையில், உணவகங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்று சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் புதன்கிழமை தெரிவித்தார்.

ஐரோப்பா முழுவதும் கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கின்றன. பிரிட்டனிலும் நிலை இப்படித்தான் இருக்கிறது. புதிதாக 310 கோவிட் மரணங்களும், 24,701 புதிய தொற்றுகளும் ஏற்பட்டதாக பிரிட்டன் புதன்கிழமை அறிவித்தது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அந்நாட்டில் தினமும் 1 லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வட்டார அளவில் பிரச்சனையை அணுகும் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கான அழுத்தத்தை அரசுக்குத் தருகிறது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big