சால்மோனெல்லா நோய் பாதிப்புகளுக்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து எந்தவிதமான வெங்காயத்தையும் சாப்பிட வேண்டாம் என்று கனேடிய சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.
இந்த வெங்காயத்தினால் சமீபத்திய வாரங்களில் கனடாவில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கனடிய வெங்காயம் பாதுகாப்பானதாகத் தோன்றுகிறதாகவும் , வெங்காயம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாத எவரும் அதை சாப்பிடக்கூடாது அல்லது அதனுடன் தயாரிக்கப்பட்ட எந்தவொரு தயாரிப்புகளையும் சாப்பிடக்கூடாது என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, மானிடோபா, ஒன்றாரியோ மற்றும் பி.இ.ஐ.யில் 114 பேரை பாதிக்கும் சால்மோனெல்லா நோய்கள் தொடர்பாக கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து சிவப்பு வெங்காயம் சாப்பிடுவதை அங்குள்ள அதிகாரிகள் ஆரம்பத்தில் எச்சரித்தனர்.
அந்த எண்ணிக்கை இப்போது கனடாவில் 239 என உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளாக வளர்ந்துள்ளது, அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 119 புதிய பாதிப்புகள் உள்ளன.
Social Plugin
Social Plugin