தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அறிமுகமானார்
தளபதி விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட டி.இமான் தற்பொழுது தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
விருதுகள் வழங்கப்பட்டு
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனது இசையை கொடுத்திருந்தாலும் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் மாபெரும் வெற்றி பெற்ற மைனா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. மைனா படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்திற்கு இசையமைத்திருந்த இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அதன் பின் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வரும் டி.இமான் தனது வித்தியாசமான இசையின் மூலம் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
டைட்டில் சாங்
சமீபத்தில் இவர் இசையமைத்து மிகப்பெரிய வெற்றியடைந்த விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் இசையமைத்து வரும் இவர் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் டைட்டில் டிராக்கை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
யாரும் எதிர்பாராத
இவ்வாறு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் டி.இமான் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் யாரும் எதிர்பாராத ஒரு புகைப்படம் ஒன்றை தற்போது இவர் பகிர்ந்துள்ளார்.
அனைவரும் ஒன்றாக
பொதுவாக ஓரிரு இசையமைப்பாளர்களை ஒன்றாக பார்ப்பதே பெரிய விஷயம் ஆனால் இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் தமிழ் திரைத்துறையில் இசையில் கொடிகட்டி பறந்து வரும் பல இசையமைப்பாளர்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொக்கிஷமான புகைப்படம்
இசை ஜாம்பவான்களான எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ராஜ்குமார், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களுடன் இளம் இசையமைப்பாளர்களான டி.இமான் மற்றும் தீனா போன்ற பலரும் உள்ளனர். யாரும் காணாத அந்த அரிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள டி.இமானுக்கு இந்த போட்டோவை பகிர்ந்ததற்கு பலரும் நன்றி கூறி வரும் நிலையில் பலரும் இது ஒரு பொக்கிஷமான புகைப்படம் என கூறிவருகின்றனர்.
Social Plugin
Social Plugin