Type Here to Get Search Results !

#LiveTamilTV

சினிமா நடிகர்களின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்!

தமிழ் சினிமா நடிகர்களின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல வெற்றி படங்களை தயாரித்து ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பிரபலமாகியுள்ள திரைப்பட நடிகர்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சில உள்ளன. சிறந்த திரைப்படங்கள் இயக்கி ப்ளாக்பஸ்டர் படவரிசையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் மற்றும் சமுதாய கருத்துகள் உள்ளடக்கிய சிறந்த திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற தமிழ் நடிகர்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு உள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியின் உரிமையாளரும் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ரெட் கெய்ன்ட் மூவிஸ்" திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பண்ணியாற்றி வந்த நிலையில் சிலரின் அறிவுரைப்படி "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர். பல படங்கள் நடித்து தமிழில் சிலரால் குறிப்பிடப்படும் நடிகராக புகழ் பெற்றுள்ள இவர், ஒரு தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.
சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமான இவர், தமிழில் "மெரினா" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இவர் ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்று பின் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கியுள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் இவரது நண்பர்களின் படங்களை தனது "எஸ் கே ப்ரோடுக்ஷன்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகனாகவும் தமிழ் திரையில் பலரின் கவனத்தை பெற்று பணியாற்றும் ஒரு முக்கிய பிரபலம் ஆவார்.

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் மூலம் ஒரு நடிகனாக திரையில் அறிமுகமான இவர், பல தடைகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். திரைத்துறையில் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி பல இளம் நடிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவின் பணியாற்றும் முக்கிய பிரபலங்களுக்கு இவரின் "ஒண்டெர் பார் பிலிம்ஸ்" நிறுவனத்தின் மூலம் வாய்ப்பளித்து பல கலைஞர்களை இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.



தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு நடிகனாக பணியாற்றி வரும் இவர் "2டி என்டேர்டைன்மெண்ட்" என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி இவரது மனைவியின் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவின் நல்ல கருத்துகள் உள்ளடக்கிய பல திரைப்படங்களை இவர் தயாரித்து தயாரிப்பாளராக பிரபலமாகியுள்ளார்.



பிரபல தயாரிப்பாளரின் மகனாக திரையில் அறிமுகமான இவர், பல படங்களில் பல்வேறு கதாபாத்திரம் ஏற்று நடித்து பிரபலமானார். பின்னர் தனது தந்தையை போலவே சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக "விஷால் பிலிம் பேக்டரி" என்னும் நிறுவனத்தினை தொடங்கி இவர் நடிக்கும் படங்களை பெரும்பாலும் இவரே தயாரித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றுள்ள "கே.ஜி.எஃப்" என்னும் கன்னட திரைப்படத்தையும் இவரது தயாரிப்பு  நிறுவனமே தமிழில் வெளியிட்டுள்ளது.




நடிகர் கமல் ஹாசன் உலக அளவில் ஒரு நடிகனாக பல விருதுகளை வென்று புகழ் பெற்றவர். இவர் 1981-ஆம் ஆண்டி "ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் தேவர் மகன், விருமாண்டி, அபூர்வ சகோதரர்கள் என பல வெற்றி படங்களை தயாரித்து பல விருதுகளை வென்றுள்ளார்.



2009-ஆம் ஆண்டு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், அடுத்தடுத்து நல்ல கருத்துகள் உள்ள படங்களை தேர்ந்தேடுத்து நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். தற்போது இவர் தனக்கென "விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்" என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இவரது படங்களை இவரே தயாரித்து வருகிறார்.




குழந்தை நட்சித்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர், பல வேடங்களில் பல கதாபாத்திரங்கள் நடித்துள்ளார். தமிழில் ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்ற இவர், திரைப்படங்களை இயக்கியும், இசையமைத்து என பல பணிகளை செய்து வந்துள்ளார். சினிமாவில் "சிம்பு சினி ஆர்ட்ஸ்" என்ற நிறுவனத்தினை தொடங்கி தயாரிப்பாளராகவும் சில படங்களை இவர் தயாரித்துள்ளார்.


இயக்குனர், நடிகர் என தமிழ் சினிமாவில் பணியாற்றி புகழ் பெற்றுள்ள இவர், "அவ்னி சினிமேக்ஸ்" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை 2004ஆம் ஆண்டு தொடங்கி பல திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களை இவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.




இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கவிஞர் என தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு முன்னணி நடிகர். இவர் நாயகனாக பல படங்களை நடித்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பார்த்திபன் "பயோஸ்கோப் பிலிம்ஸ் பார்ம்ஸ்" என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை 1992-ஆம் ஆண்டு தொடங்கி  சிறந்த கருத்துகள் கொண்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.


சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை ஒரு இசையமைப்பாளராக தொடங்கியுள்ள இவர், பின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ஒரு முன்னணி இசையமைப்பாளராக பிரபலமானார். திரைப்படங்களில் நடிகனாக அறிமுகமான இவர், பொதுவாக இவரது படங்களுக்கு இவரே இசையமைத்து பெரிய அளவில் புகழ் பெற்று தமிழில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் "பாத்திமா பிலிம் ப்ரோடுக்ஷன்" என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி இவரது படங்களை இவரே தயாரித்து வருகிறார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big