இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை 15 வரை சர்வதேசபயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் குறையாததால், வரும் ஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மத்திய அரசின் விதிமுறைகளுடன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Social Plugin
Social Plugin