இரவு உறங்கச் செல்லும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது சரிதானா? இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களுள் ஒன்றாக வாழைப்பழம் சொல்லப்படுகிறது. ஆனால் என்றாவது எதனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்ததுண்டா?
வாழைப்பழம், மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு ஏற்ற பழமாகும். ஆனால், இந்த வாழைப்பழம் சிறந்த ஆற்றல் உணவாக கருதப்படுகிறது என்பது தெரியுமா? அதோடு, வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதுக்குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, வாழைப்பழத்தில் இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல. மேலும் இரவில் இதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சளிப் பிடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது தவிர, வாழைப்பழம் செரிமானமாவதற்கு நிறைய நேரம் எடுக்கும் மற்றும் இரவில் இதை சாப்பிட்டால், அது மிகுந்த சோம்பலை உண்டாக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உங்களை மருத்துவரிடம் இருந்து விலக்கி வைக்கும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதேப் போல் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது தெரியுமா? அன்றாடம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் நாம் நினைத்திராத பல நன்மைகள் கிடைக்கும்.
வாழைப்பழத்தின் நன்மைகள்
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு, அதைக் குறைக்கவும் உதவுகிறது. உடலுக்கு பல சத்துக்களை அளிக்கிறது. இதயம் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் ட்ரிப்டோபன், வைட்டமின் பி6, வைட்டமின் பி போன்றவையும் வாழைப்பழத்தில் உள்ளன. இருப்பினும், இந்த பழம் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்றதாக கருதப்படவில்லை. ஆனால் உண்மையில் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகளைக் காண்போம்.
நல்ல உறக்கம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நாள் முழுவதும் வேலை செய்து சோர்ந்து போன தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது. மாலை வேளையில் 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். ஊட்டச்சத்து நிபுணர் ஷாஷாங்கின் கூற்றுப்படி, "ஒரு வாழைப்பழத்தில் சுமார் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது நமது உடலுக்கு 10% அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது."
அமிலக் கட்டுப்பாடு
ஆராய்ச்சியின் படி, மிகவும் காரமான உணவுகளை உண்பவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் சிறப்பான பழம். அதிலும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்ணைக் குறைக்க உதவுகிறது.
Social Plugin
Social Plugin