Type Here to Get Search Results !

#LiveTamilTV

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொது முடக்கத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 21, ஜூன் 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாமல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுவருவதற்கு அனுமதி கிடையாது. அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேஷன் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 மாவட்டங்களில் தேநீர் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big