டொரோண்டோவின் முக்கிய சுற்றுலா பகுதியான Toronto Islands, இப்போதைக்கு திறக்கப்படாது என, நகரமுதல்வர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மார்ச் மாதம் முதல் அவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பகுதி பகுதியாக Toronto Islandsஐ மீள திறப்பது கடினமானது எனவும், அவற்றின் ஏரிக்கரைகள், பூங்காக்கள் போன்றவற்றை தொகுதியாகவே திறக்க முடியும் என்றும் நகரமுதல்வர் ஜோன் டோரி கூறியுள்ளார்.
அதேவேளை, தனிமனித இடைவெளியை பின்பற்றும் நோக்கில், அரைவாசி பயணிகளுடனேயே படகுகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற, கனடிய போக்குவரத்து சட்டத்துடனும், Toronto Islandsஐ மீள திறப்பது முரண்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Social Plugin
Social Plugin