Type Here to Get Search Results !

#LiveTamilTV

கழுத்து, முகத்தில் மருவா?.. எளிதாக அகற்ற சில யோசனைகள்

கழுத்து, முகத்தில் தோன்றும் மருக்களை எளிதாக அகற்ற உங்களுக்கு சில யோசனைகள். பொதுவாக சருமத்தில் மருக்கள் உருவானால் பார்க்கவே அருவறுப்பாக இருக்கும்.

இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும். அதிலும் இந்த மருக்கள் அழகை கெடுப்பது போல் இருக்கும். இவற்றை நீக்க உதவும் சில இயற்கை வழிகளை காண்போம். ஒரு துண்டு வெங்காயத்தை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தேய்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் உப்பு தேய்த்த வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி செய்தால் மருக்கள், தழும்புகள் நீங்கி விடும் . கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை நாள்தோறும் மருவின் மேல் வைத்து கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மரு மறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து மரு இருக்கும் இடத்தில் தடவி 20-25 நிமிடம் வரை ஊற வைத்து பின் கழுவி வந்தால் மருக்கள் விரைவாக மாறிவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் மரு விரைவில் உதிர்ந்து போய் விடும்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big