மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து தயாரித்திருக்கும் 'முகிழ்' குறும்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் குறும்படம் 'முகிழ்'. 


இந்தப்படத்தில் விஜயசேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா, விஜயசேதுபதியின் மகளான ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

சத்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்திற்கு ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் இசை அமைத்திருக்கிறார். 

இந்தக் குறும்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த படைப்பை பற்றி இயக்குனர் கார்த்திக் பேசுகையில்,'பெற்றோர்கள் எப்படி தங்களது குழந்தையை வளர்க்கிறார்கள் என்பது குறித்தும், அந்த குழந்தைக்கு ஒரு பிரச்சினை வரும்போது பெற்றோர்கள் அதனை எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் மிக இயல்பாக சொல்லி இருக்கிறோம். 

முகில் படத்தின் மூலம் நடிகர் விஜயசேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். 13 வயது பெண்ணொருவருக்கு தாயாக நடிகை ரெஜினா கஸன்ட்ரா நடித்திருக்கிறார். இந்த வேடத்திற்கு அவரே தமிழில் பின்னணியும் பேசியிருக்கிறார்.' என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பதும், அவரின் மகள் ஸ்ரீஜா சேதுபதி 'முகிழ்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும், இதன்மூலம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குடும்பம் 'நட்சத்திர குடும்பம்' என்ற அந்தஸ்த்தை பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.