Arumuga kumarதேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசியா, (National Film Development Corporation Malaysia). முதல் முறையாக FINAS என்று அழைக்கப்பட்டும் இந்த நிறுவனத்தில், தமிழ் திரைப்பட மற்றும் இந்தியா மார்க்கெட் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் ஒரு இந்தியர். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார் அவர்களுக்கு தான் இந்த பெருமை தற்போது கிடைத்துள்ளது.
மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய பட்டமான டத்தோ விருது ஏற்கனவே பிரபல தமிழ் நடிகர் ராதா ரவி அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் இயக்குநர் ஒருவருக்கு மலேசியாவில் வழங்கப்பட்டுள்ள கௌரவம் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
திரு. ஆறுமுக குமார் அவர்கள் இயக்குநராக மட்டும் இல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவி தனக்கு கிடைத்தது குறித்து பேசிய அவர், “இது எனக்கு சற்றும் எதிர்பாராமல் கிடைத்த வரம் என்று கூறினார்.